செய்திகள்

ஏதிர்க் கட்சி தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு ஐ.ம.சு.கூ செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம்

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவர் தொடர்பாக கூடி தீர்மானமொன்றை எடுக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்தவுக்கு அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் குமார வெல்கம எம்.பி எழுப்பிய கேள்விகளை தொடர்து சபையில் எழுந்த சர்ச்சைகளையடுத்தே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

குமார வெல்கம உள்ளிட்ட எம்.பிக்கள் சிலர் எதிர்க் கட்சி தலைவராக தினேஸ்குணவர்தன நியமிக்கப்பட வேண்டுமென சபாநாயகரிம் கோரிக்கைகளை முன் வைத்த நிலையில் அதன்போது பதிலளித்துள்ள சபாநாயகர் “ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்தவின் எழுத்து மூலமான கோரிக்கையின்படியே நிமல் சிறிபால டி சில்வா எதிர்க் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்க் கட்சி தலைவர் தொடர்பான பிரச்சினையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் யார் அவர் என தெரிவியுங்கள்” என சுசில் பிரேமஜயந்தவுக்கு அறிவித்துள்ளார்.