செய்திகள்

ஏறாவூர்ப்பற்று கல்வி கோட்ட தமிழ் தின போட்டிகள்

தமிழ் சமூகம் கல்வியில் முன்னேறவேண்டுமானால் ஒவ்வொரு பாடசாலையும் கல்வியில் வளர்ச்சிப்போக்கை கொண்டிருக்கவேண்டும் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி கோட்டங்கள் மத்தியில் தமிழ் தின போட்டிகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் ஏறாவூர்ப்பற்று 01 கல்வி கோட்டத்துக்கான தமிழ் தின போட்டிகள் இன்று காலை ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று 01 கல்வி கோட்டத்துக்கான கல்விப்பணிப்பாளர் ம.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் திருமதி ரூபிவலன்ரினா பிரான்சிஸ்,மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் த.யுவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களினால் கலாசார பாரம்பரியங்கள் தாங்கியவாறு அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து தமிழ் தின போட்டிகள் ஆரம்பமாகியது.பல்வேறு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்,

ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் ஒன்றிணைந்து அவற்றினை வெளிக்கொணர்வதன் மூலமே முழுமையான கல்வியை பெறமுடிகின்றது.

மாணவர்கள் மத்தியில் ஒளிந்துள்ள திறமைகளை இனங்கண்டு அவற்றினை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் கடமையாகும்.இனங்காண்வது மட்டுமன்றி அவற்றினை வளர்த்தெடுப்பதும் ஆசிரியர்களது கடமையாகும்.

எமது சமூகம் கல்வியில் முன்னேறவேண்டுமானால் ஒவ்வொரு பாடசாலையும் கல்வியில் வளர்ச்சிப்போக்கை கொண்டிருக்கவேண்டும்.சிறந்தமுறையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும்.

DSC_9246 DSC_9251 DSC_9266 DSC_9267 DSC_9270 DSC_9272 DSC_9286