செய்திகள்

ஐஎஸ் அமைப்பில் 800ற்கும் மேற்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகள்- பிபிசி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஐஎஸ் அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக இதுவரையில் 800ற்கும் மேற்பட்டவர்கள் பிரிட்டனிலிருந்து சென்றுள்ளது பிபிசி மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மூன்று மாதகாலமாக பிபிசி மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் மேலும் தெரியவந்துள்ளதாவது.
பிரிட்டனை சேர்ந்த பல இளைஞர்கள் சிரியாவில் உள்ளனர்.ஆண்கள் போராடுவதற்காக சென்றுள்ள அதேவேளை பெண்கள் மருத்துவஉதவிகள் போன்ற துணைச்சேவைகளுக்காக சென்றுள்ளனர்.
பலர் சமூக ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் . ஏனையவர்கள்இது குறிந்து அறிந்துகொள்ளட்டும் என்பதற்காக தங்களை சமூக ஊடகங்களில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 160 பேர் குறித்து ஆராய்ந்தவேளை பலர் சிறியசிறிய குழுக்களாக பிரிட்டனிலிருந்து சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

மூன்று இளம்நண்பர்கள் கொன்வென்ரியிலிருந்து சென்றுள்ளனர்.அதேபோன்று போர்ட்ஸ்மவுத்திலிருந்து இன்னொரு குழுவினரும் சென்றுள்ளதும்,தெரியவந்துள்ளது. அவர்கள் தாங்கள் அறிந்த நபர் ஓருவர் மூலமாக தொடாபினை ஏற்படுத்திக்கொண்டு சிரியா சென்றுள்ளனர்.
இவர்கள் ஐஎஸ் அமைப்புடன் இணைவதில் சமூக ஊடகங்கள் குறிப்பிடத்தக்க காரணமாக காணப்பட்டாலும்,இவர்களில் பலர் நேரடி தொடர்புகள் மூலமும் ஐஎஸ் அமைப்புடன் இணைந்துள்ளனர்.
நேரடி தொடர்புகள் இவர்கள் சிரியா செல்வதற்கும் காரணமாக இருந்துள்ள அதேவேளை பல்கலைக்கழகங்களிலும், சிறைச்சாலைகளிலுமே இந்த இஸ்லாமியமயப்படுத்தல் அதிகளவில் இடம்பெற்றுள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.