செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஒரு போதுமில்லாத சனக்கூட்டம்

ஐக்கிய தேசிய கட்;சியின் மே தின கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் ஓருபோதுமில்லாதவாறு பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் இன்று அந்த கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
கடந்காலங்களில் தொடர் தோல்விகளை கண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி கடந்த ஜனவரி மாதம் முதல் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வெற்றிக்கண்டுள்ள நிலையில் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபட்டு அந்த வெற்றியை கொண்டாடும் வகையிலேயே இந்த கூட்டம் அமைந்துள்ளது.
1மணியளவில் மாளிகாவத்தை பகுதியிலிருந்து கெம்பல் மைதானம் நோக்கி பேரணி ஆரம்பித்த நிலையில் அதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
கடந்த சில வருடங்களாக இதே மைதானத்திலேயே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேதின கூட்டங்களை நடத்தி வந்ததுடன் அந்த கூட்டங்களுக்கென அவர் பெருந்திரளான மக்களை வரவழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் அமைந்துள்ளது.
இதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் ஹைட்பார் மைதானத்தில் நடைபெற்ற போதும்; அதில் அது போன்ற சனத் தொகையை காணக்கிடைக்கவில்லை. அதேவேளை மஹிந்த ஆதரவு தரப்பினர் நடத்திய கூட்டத்திற்கு குறிப்பிட்டுக் கூறக் கூடியளவு ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும் நடந்த கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஜே.வி.பியின் கூட்டமும் பேரணியுமே சிறப்பானதாக ஒழுக்கங்கள் பேணியதா அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
000b
000-1