செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித ஒப்பந்தமும் கிடையாது : மைத்திரி

100 நாள் வேலைத்திட்டத்துக்காக 49 அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னணியொன்றை உருவாக்கினோமே தவிர ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் எந்தவொரு ஒப்பந்தந்தையும் மேற்கொள்ளவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தம்பதெனியவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் தனிப்பட்ட ரீதியில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் காலத்தில் கட்சிகள் உள்ளிட்ட 49 அமைப்புகளுடன் சேர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்திற்காக முன்னணியொன்றையே உருவாக்கினோம். அதன்படி புதிய அரசாங்கத்தை அமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.  அவற்றில் எனக்குறிய பகுதியை செய்துவிட்டேன். இனி மற்றையவர்களின் பகுதியுள்ளது. அதனை செய்ய வேண்டும்.