செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் தேடுதல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவதூறும் செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகத்தில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அவ்வாறான பிரசுரம் எதுவும் அச்சிடப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.