செய்திகள்

ஐநாவின் வதிவிடப் பிரிதிநிதி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சந்திப்பு

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின கொவிட் நிலவரம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு ஐநாவின் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி தேவையான ஒத்துழைப்புகளை தாம் வழங்க தயாராக இருப்பதாக ஐநா விதிவிடப்பிரதிநிதி கூறியுள்ளார்.
-(3)