செய்திகள்

ஐநா சிறப்பு நிபுணர் இன்று கொழும்பு வருகை: நல்லிணக்க முயற்சிகள் குறித்து பேசுவார்

நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று இலங்கை வருகின்றார்.  ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் என்ற நிபுணரே இன்று கொழும்பு வருகின்றார்.

ஆறு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர், அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கொழும்பு வரும்  ஐ.நாவின் முதலாவது உயர்மட்டப் பிரதிநிதி இவரேயாவார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர் கொழும்பு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.