செய்திகள்

ஐந்து பந்துவீச்சாளர்கள் அவசியம்

அவுஸ்திரேலியாவுடனான இறுதிடெஸ்ட்போட்டியில் இந்தியா 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும்.இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கவேண்டும் .வட்சன்போன்ற ஒரு சகலதுறை ஆட்டக்காரர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இடது கை சுழற்பந்துவீச்சாளர் அக்சர்பட்டீலுக்கு இடமளிப்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர் இந்த போட்டியிலும் அவுஸ்திரேலியாவே வெல்லும் என தெரிவித்துள்ளார்.