செய்திகள்

ஐந்து வருடங்களில் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்கிறார் திகாம்பரம்

தற்போது பாராளுமன்றத்தில் மூன்று அமைச்சர்கள் மலையக மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்றோம்.

எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தனிவீடு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாட்டப்பட்ட அடிக்கல் இடத்தில் புற்கள் முளைப்பதாக சில அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றார்கள்.

ஆனால் புற்கள் வளரவில்லை அதற்கு மாறாக கட்டிட பணிகள் இடம்பெற்று கொண்டிருப்பதை மக்களால் உணர முடியும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

18.05.2015 அன்று கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்பு இருந்த அரசியல் தலைவர்கள் இந்திய அரசாங்கத்தினூடாக இணைந்து மலையக மக்களுக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி வழங்கியவர்கள் அதனை செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்.

ஆட்சி காலத்தில் இருந்த போது தனி வீடுகள் கட்டி தருவதாக கூறினாலும் மாடி வீடுகளை கட்டுவதற்கு மும்மரமாக செயற்பட்டார்கள். ஆனால் நாங்கள் எப்பொழுதும் லயன் வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனி வீட்டில் உரிமையுடன் வாழும் சமூகமாகவே இருக்க வேண்டும் என்பதில் மும்மரமாக செயல்பட்டதுக்கு கிடைத்த தற்போது அமைக்கப்படுகின்ற தனி வீடு திட்டமாகும்.

தற்போது நாங்கள் இந்தியா அரசாங்கத்தோடும் இலங்கை ஜனாதிபதி அவர்களோடும் கலந்து பேசியதன் காரணமாக இன்னும் 5 வருடங்களில் மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்தார்.

மேலும்,
100 நாள் வேலைத்திட்டதில் 375 வீடுகளை கட்டிய எனக்கு 5 வருடங்களில் இம்மக்களுக்கு ஜம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதில் கஷ்டமான விடயமல்ல.

தோட்ட தொழிலாளர்கள் தனது ஊதியத்தை அதிகரிப்பதற்காகவே சில கட்சிகளை நம்பி வாழ்கின்றார்கள். கூட்டு ஒப்பந்தம் முடிந்து இன்று 18ம் திகதி சம்பள பேச்சுவார்த்தை பேசி தீர்மானிப்பதாக சில தலைவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். தொழிலாளிகளுக்கு நாட் சம்பளம் ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

இதன் காரணமாகவே நாங்கள் இன்று அமைதியாக இருக்கின்றோம். இவர்கள் பெற்று தருவதில் தவறும் பட்சத்தில் நாங்கள் மக்களின் நலனுக்காக வீதியில் இறங்கி ஆர்பாட்டங்களை மேற்கொள்வதாகவும் தற்போது தோட்ட தொழிலாளிகளுக்கு நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்பட்டது பொருத்துக்கொள்ளாத சிலர்கள் இது பொய் என விமர்சனம் செய்கின்றார்க்ள. ஆனால் இது சட்ட பூர்வமான ஆவணம் என்பதினை எல்லோரும் விளங்கி கொள்ள வேண்டும்.

200 வருடங்களாக வாழ்ந்து வந்த குடியிருப்புகளுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டமை இந்த மக்களுக்கு கிடைத்த உரிமையாகும்.

இன்று ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கவுள்ள அனைத்து வளங்களையும் தான் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக இதன்போது அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.