செய்திகள்

ஐரோப்பாவை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் கிரீஸின் தேர்தல் முடிவு

நேற்று நடைபெற்ற கிரீஸ் நாட்டு (கிரேக்கம் ) தேர்தலில் தீவிர இடதுசாரி சைரிசா (Syriza) கட்சி 149 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  அக் கட்சியின் தலைவர் அலெக்ஷி சிப்ரஸ் (Alexis Tsipras) பிரதமராக இன்று பதவியேற்று கொண்டார். இவரே கிரீஸ் நாட்டில் மிக இள வயதில் பிரதமராக பதவியேற்றவர் ஆவார்.

alexis

 

 

 

 

 

 

 

 

 

 இக் கட்சியானது   ஐரோப்பிய யூனியன் விடுத்த பொதுச் செலவுகளை குறைத்து வரவுசெலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்கும்படியான கோரிக்கைக்கு எதிராகவும், ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்தவேண்டிய €240 பில்லியன் தொகைகையுடன் உடன்ப்படபோவதில்லை என்றும் பிரச்சாரம் செய்திருந்தது.  கிரீஸில் நடந்த இந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து யூரோவின் பெறுமதியானது 11 வருடங்களின் பின் அமெரிக்க டொலருக்கு எதிராக மிகக்குறைந்த பெருமானத்துக்கு வீழ்ச்சியுற்றது.

greece-4