செய்திகள்

ஐ. ததே. க.வின் நிகழ்ச்சிநிரலுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு சுதந்திரக் கட்சி அதரவு அளிக்காது என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவு இருக்கும் என்றும் அவர் கண்டியில் நேற்று தெரிவித்தார்.