செய்திகள்

ஐ.தே.கவின் செயற்குழு இன்று அவசரமாக கூடுகின்றது

முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று அவசரமாக கூடவுள்ளது.
கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் கட்சி தலைமையகமான ஶ்ரீ கொத்தாவில் இவர்கள் கூடவுள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது தேர்தல் திருத்தம் , பாராளுமன்றத்தை கலைத்தல் , எதிர்வரும் பொதுத் தேர்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.