செய்திகள்

ஐ.நா. உதவிச் செயலாளர் சனியன்று இலங்கை விஜயம்: வடக்கிற்கும் செல்வார்

ஐ. நா. உதவிச் செயலாளர் நாயகம் ஹொலியங்ஸ நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். சுமார் ஆறு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நேரில் விஜயம் சென்று யு. என். டி. பி. யினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளார்.

இதேவேளை ஹொலியங்ஸ ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து தற்கால அரசியல் நடப்பு, பொருளாதார நிலைமை ஆகியன குறித்தும் ஆராயவுள்ளார். வடபகுதிக்கும் இவர் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர் ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழு தலைவராகவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகியாகவும் ஆசிய பசுபிக் பிராந்திய பணியக பணிப்பாளருமாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.