செய்திகள்

ஐ.நா.சபை பட்டியலில் புயல் பெயர்களில் இருந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ வார்த்தை நீக்கம்

ஐ.நா.சபையின் உலக வானிலை அமைப்பு புயல்களுக்கு பெயர் சூட்டி வருகிறது. அதற்கான பெயர் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற வார்த்தையுடன் கூடிய பெயரும் இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் அந்த பெயரை ஐ.நா.சபை தற்போது நீக்கியுள்ளது. இந்த தகவலை உலக வானிலை நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிளாரி நுல்லிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற தீவிரவாத அமைப்பினர் சிரியா மற்றும் ஈராக்கில் தனிநாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெரும் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.

எனவே இந்த நாசகார தீவிரவாத இயக்கத்தின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற பெயர் புயல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.