செய்திகள்

ஒன்பது நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிப்பு

ஒன்பது நாடுகளுக்கான தூதுவர்களின் நியமனங்களை இலங்கையின் வெளியுறவு அமைச்சு உறுதி செய்தது. இந்த நியமனங்களுக்குள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமையதிகாரி ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்ணாயக்க பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் வெளியுறவு செயலாளர் சேனுக செனவிரட்ண தாய்லாந்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியநட்நாமுக்கான தூதுவராக என்.யுதிஸாநாயக்கவும் சுவீடனுக்கான தூதுவராக ஆர்.டி.ராஜபக்சவும் நெதர்லாந்துக்கான தூதுவராக ஏ.எச்.எம்.சாதிக்கும், கட்டாருக்கான தூதுவராக டபிள்யூ.எம்.கருணாதாஸவும் ஈரானுக்கான தூதுவராக வை.கே.ரொஹான் ஜித்தும் இஸ்ரேலுக்கான தூதுவராக பி.செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.