செய்திகள்

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனைக்கு நிதி அமைச்சு அனுமதி

நாட்டில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் யோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்படி சுப்பர் மார்க்கட் ஊடாக 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். இதன்போது ஒருவரால் உள்நாட்டு மதுபானம் 5 லீட்டர் வரையிலும், வெளிநாட்டு மதுபானம் 12 லீட்டர் வரையிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது.
-(3)