செய்திகள்

ஒபாமாவின் முன் தனது இராணுவ பலம், கலாசாரத்தை காண்பித்த இந்தியா

இந்தியாவின் இன்றைய குடியரசு தினத்தின் போது ப ல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கண் கவரும் வகையில் ஊர்வலத்தில் பவனி வந்தன. இதுபற்ரிய விபரத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஊர்வலங்களும் இதன்போது இடம்பெற்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால், வழக்கத்தைவிட பிரமாண்டமாக ஊர்வலங்கள் இடம் பெற்றன. முப்படைகள் அணிவகுப்பு, இலகு ரக ஹெலிகாப்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ரேடார்கள் ஊர்வலம் என ராணுவ பலத்தை ஊர்வலத்தின் போது இந்தியா காண்பித்தது.

மேலும், குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் சக்தியை எடுத்துக்காட்டும் வகையில் மகளிர் ராணுவ பிரிவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. அதேபோல மேக் இன் இந்தியா, இந்திய ரயில்வே, மங்கள்யான் வெற்றி போன்றவற்றை எடுத்துக் காட்டும் ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. கர்நாடகாவில் சென்னபட்ணா நகரில் தயாராகும் பொம்மைகள் மிகவும் பிரபலம் என்பதால் அதை முன்வைத்து அலங்கார ஊர்தி சென்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இது முதல் குடியரசு தினம் என்பதால் இறு மாநிலங்களுமே தனித்தனி ஊர்திகளை காட்சிப்படுத்தின.

 1 2 3