செய்திகள்

ஒபாமா மகள் மாலியாவை மணக்க 50 பசுக்கள், 70 செம்மறி ஆடுகள், 30 ஆடுகளை கொடுக்க முன்வரும் கென்ய சட்டத்தரணி

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் 16 வயதேயான மகள் மாலியாவை தான் உண்மையாகவே காதலிப்பதாகவும் அதற்காக 50 பசுக்கள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 ஆடுகளை தான் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கென்யாவின் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்திருக்கிறார் .

மாலியா குடும்பத்தின் பணம் மீது குறிவைத்தே தான் அவரை காதலிப்பதாக பலர் நினைக்கக் கூடும் என்றும் ஆனால் மாலியாவை அறிந்த நாள் முதல் அவர் மீது உண்மையான காதல் கொண்டிருப்பதாகவும் பெலிக்ஸ் கிப்புரோனோ என்ற அந்த சட்டத்தரணி கென்ய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு மாலியா மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் அதுமுதல் தான் எந்தப் பெண்ணுடனும் சுற்றித் திரியவில்லை என்றும் கூறியுள்ள அவர் தனது இந்த விருப்பம் பற்றி தனது குடும்பத்தாருக்கு தெரிவித்ததாகவும் அவர்களும் அதற்கு ஆதரவளிப்பதாகவும் .அவர் குறிப்பிட்டுளார்.

கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஊடாக தனது இந்த ஆசையை மாலியாவுக்கு அறிவிக்கும் முயற்சிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

மாலியாவுக்காக அவர் கொடுக்க முன்வந்துள்ள 50 பசுக்கள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 ஆடுகளின் பெறுமதி 90,000 டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமது வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருக்கும் என்றும் எப்படி பசிவில் இருந்து பால் கறப்பது எப்படி எப்படி சமைப்பது என்று எல்லாம் தான் மாலியவுக்கு கற்றுக்கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Malia 2 Malia 3 Malia 4

 Malia 5