செய்திகள்

ஒருமொழியில் மட்டுமே தேசியகீதம் பாட வேண்டும் -பெங்கமுவே நாலக்க தேரர்

´மஹிந்த இல்லாத நாடு´ என்று நுகேகொடஇ கண்டி கூட்டங்களில் வந்த மக்கள் அலையை பார்த்து அச்சமடைந்துள்ள அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எவ்வித தேவையும் நாட்டுக்கு இல்லை எனவும் தேசப்பிரேமி பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடித்த சமயத்தில் அவ்வாறு அவசியம் காணப்பட்டபோது தேசிய அரசாங்கம் உருவாகவில்லை என்று கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.  மேலும் சுதந்திர கட்சியை இல்லாது செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளது ​தேசிய கீதத்தை ஒரு மொழியில் பாட வேண்டும் என்று கூறிய பெங்கமுவே நாலக்க தேரர்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட அனுமதித்து அரசியல் யாப்பை மீறியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவில் 60 மொழிகள் வழக்கில் இருந்தாலும் தேசிய கீதம் பெங்காலி மொழியில் மாத்திரமே பாடப்படுவதாகவும் வேறு மொழியில் பாட எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் நாலக்க தேரர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைதியாக உள்ளதெனவும் இந்தியாஇ அமெரிக்காவுடன் இணைந்து பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.