செய்திகள்

ஒரு மாதத்தின் பின்னர் திறக்கப்பட்ட இலங்கை!

நாடு முழுவதும் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு மீண்டும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு பின்னர் கட்டுப்பாட்டை தொடர்வதற்கு தீர்மானிக்கவில்லை.
ஆனபோதும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இதேவேளை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய பின்னர் மக்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் நேற்று மாலை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

ஜுலை 5 வரையில் அந்த ஒழுங்குவிதிகள் அமுலில் இருக்கும். இதற்கமை வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும். பொதுப் போக்குவரத்துகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதம் வரையிலானோரே பயணிக்க முடியும். அத்துடன் வாடகை வாகனங்களில் இரண்டு பயணிகளையே ஏற்றிச் செல்ல முடியும்.

அத்துடன் மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
-(3)