செய்திகள்

ஒரேயொரு நாள் மட்டும் பதவிவகித்து விட்டு ராஜினாமா செய்தார் ஷிராணி

பிரதம நீதியரசராக நேற்று மீண்டும் நியமனம் பெற்ற கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஒயர் ஒரு நாள் மட்டும் அந்த பதவியை வகித்து விட்டு இன்று அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அவரது சம்பிரதாயபூர்வமான நிகழ்வு இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது ஏராளமான சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக சட்டரீதியாக நியமனம் பெரும் ஸ்ரீபவனுக்கு அவர் இந்த வைபவத்தின்போது அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நேற்று பிரதம நீதியரசராக பதவி ஏற்ற சில மணித்தியாலங்களின் பின்னர் இன்று தான் பதவி விகுவதாக அவர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.