செய்திகள்

ஒரே நாளில் 866 தொற்றாளர்கள் : கொழும்பு மாவட்டத்தில் 398 பேருக்கு தொற்று – (விபரங்கள் உள்ளே)

இலங்கைகயில் அதிகமான கொரேனா தொற்றாளர்கள் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கொவிட் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்றைய தினத்தில் 866 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 535 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெல்லம்பிட்டிய 34, கொட்டாஞ்சேனை 63, பம்பலப்பிட்டி 2, , மட்டக்குளிய 79, கொலன்னாவ 12, களனி 19,  அங்கொட 6, கோட்டை 2 , கிரேண்ட்பாஸ் 29,  மோதரை 9, மருதானை 13, மாளிகாவத்தை 3 , நுகேகொட 1, கொள்ளுப்பிட்டிய 1, மொரட்டுவ 4, கல்கிசை 3, புலுமென்டல் 60, அலுத்கடே 7, பொரளை 11 ,  கடுவலை 1 என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் பேலியகொட 54, கம்பஹா 21, ராகம 7, பதுளை 1 , நுவரெலியா 2,  மஸ்கெலிய 1, ஜாஎல 6,  சிலாபம் 1, பஸ்ஸசரை 1, ,என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் மேலும் சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருதானை மற்றும் தெமட்டககொட பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
-(3)