செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொண்ட கட்டார் – இத்தாலி வீரர்கள்

ஜப்பான் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் கட்டாரின் முடாஸ் பர்ஷிம், இத்தாலியின் கியள்மார்கோ தம்பெரய் ஆகிய இருவரும் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இருவரும் 2.37 மீட்டர் உயரத்தை பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் அவர்களுக்கான தங்கப் பதக்கத்தை யாருக்கு வழங்குவது என்று குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தங்கப் பதக்கத்தை சமமாக பகிர்ந்து அளிக்கும்படி அவர்கள் நடுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி அந்தப் பதக்கம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இதுவொரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.
-(3)