செய்திகள்

ஒளடத கொள்கை சட்டமூல விவாதத்தை ஜனாதிபதியே ஆரம்பித்தார்

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்தார்.

நூறுநாள் திட்டத்தின் கீழ் அரசினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் தேசிய ஒளடத கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஔடத சட்டமூலம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்தது.

தேசிய ஔடத கொள்கை யின்படி மருந்து, வைத்திய உபகரணங்கள் மற்றும் உற்பத்திகள் பதிவு செய்தல்,அனுமதிபத்திரம் பெற்றுகொடுத்தல், இறக்குமதி செய்தல், வைத்திய உபகரண உற்பத்தி,இரசாயன பரிசோதனைகள் செய்தல், கட்டுப்படுத்தல் உட்பட அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறக்கூடிய தேசிய ஔடத அதிகாரசபை அமைத்தல் மற்றும் ஒளடத கட்டுப்பாட்டுப் பிரிவு, வைத்திய உபகரணங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகள் இவ்வதிகாரசபையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.