செய்திகள்

கடந்த காலத்தை விட இலங்கைஇந்திய உறவை வலுப்படுத்துவோம்

கடந்த காலத்தை விட இலங்கை இந்திய உறவை வலுப்படுத்துவோம். இலங்கை இந்திய உறவானது வரலாற்று ரீதியானது. கலாசார,பொருளாதார ரீதியில் நாம் இணைந்துள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சந்திப்பை இந்திய பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால ஆகிய இருவரும் ஒன்றிணைந்து நடாத்தினர்.
கலாசாரம்,பொருளாதாரம்,தொழிநுட்பம்,விவசாயம் போன்ற விடயங்களில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.