செய்திகள்

கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அதிகாரிகளுக்கு இல்லை – இர­ணை­தீவு மக்கள்

கிளி­நொச்சி ‘இரணை தீவு’ மக்­கள் தங்­க­ளைச் சொந்த மண்­ணில்மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கடந்த திங் கட் கி­ழமை காலை 50 பட­கு­க­ளில் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் இரணைதீவுக்­குச் சென்­ற­னர்.தொடர்ந்து தமது சொந்த மண்­ணில் மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கோரி ஆர்ப்­பாட்­டம் செய்ய முயற்­சித்­த­னர். எனி­னும் அந்த மக்­க­ளு­டன் பேச்­சில் ஈடு­பட்ட அங்கு நிலை­கொண் டுள்ள கடற்­ப­டை­யி­னர் உரிய அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி உரிய நவ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்­த­னர்.

கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொள்­ளாத மக்­கள் தமது கிரா­மத்­தில் உள்ள கோயி­லுக்கு அரு­கா­மை­யில் போராட்­டத்தை மேற்­கொண்­ட­னர். தீர்வு கிடைக்­காத நிலை­யில் இரணைதீவு கிரா­மத்­தில் தங்கி நின்று போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக அந்த மக்­கள் முடி­வு­ செய்­த­னர்.

மாவட்­டச் செய­லர், மற்­றும் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ர­முள்ள அதி­கா­ரி­கள் தமது போராட்ட இடத்­துக்கு வந்து மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­தாலே அன்றி தாம் அந்த இடத்தை விட்டு நக­ரப் போவ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர். அந்த மக்­க­ளு­டன் பங்­குத் தந்­தை­யர்­க­ளும் இணைந்து கொண்­ட­னர்.

‘இரணை தீவில் உள்ள ஆல­யத்­துக்கு முன்­பாக மக்­கள் சமைத்து உண்­கின்­ற­னர். பெண் தலை­மைத்­து­வக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே அங்கு அதி­க­மாக தங்­கி­யுள்­ள­னர். 26 ஆண்­டு­க­ளின் பின்­னர் இர­ணை­தீ­வில் வாழத் தொடங்­கி­யுள்­ள­னர் இனி இந்த இடத்தை விட்டு எந்­தக் காண­ரம் கொண்­டும் நக­ரப்­போ­வ­தில்லை. எம்மை வந்து சந்­தித்து எமக்­கான பதில்­க­ளைக் கூறாத அதி­கா­ரி­கள் தான் இதற்கு முழுப் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளா­வர். கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற­வேண்­டும். உரிய தரப்­பு­க­ளு­டன் பேசுங்­கள் என்று கடற்­ப­டை­யி­னர் கூறிய பின்­ன­ரும் அவர்­கள் வாயை மூ­டி­யி­ருப்­பது வேதனை தரு­கி­றது’’ என்று போரா­டும் மக்­கள் தெரி­வித்­த­னர்.(15)