செய்திகள்

கடவுளே கடவுளே … ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்: டிரெண்டாகும் #HappyBirthdaySachin

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதால் #HappyBirthdaySachin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பலரும் சச்சினுக்கு போனிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ட்விட்டரில் சச்சினுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருவதால் #HappyBirthdaySachin என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று கிரேஸிகேர்ள் என்பவர் சச்சினுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்வீட் செய்துள்ளது.சச்சின் பிறந்தபோது டாக்டர் அவரை பார்த்து சொன்னார்,கடவுளே வந்துவிட்டீர்களா, ஆசிர்வாதம் செய்யுங்கள் என. #HappyBirthDaySachin என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வழிகாட்டுதலின்படி விளையாடுவதில் பெருமை அடைகிறேன் என்று கிரிக்கெட் வீரர் உன்முக்த் சந்த் ட்வீட் செய்துள்ளார்.