செய்திகள்

கடைக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை

கடந்த வெள்ளிக்கிழமை பகல் கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற யாழ்.மல்லாகத்தைச் சேர்ந்த சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லையென தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பலவிடங்களிலும் தேடியலைந்துள்ளனர். சிறுவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில் குடும்பத்தினர் மறுநாள் சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மல்லாகம் காளிகோயில் வீதியைச் சேர்ந்த இராஜேந்திரன் கினிஸ்(வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு காணாமற் போனவராவார்.