செய்திகள்

கடைசியாக விவேக்குடன் நடித்த பாலிவுட் நடிகை – வீடியோ வெளியிட்டு உருக்கம்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக, லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் நடிகர் விவேக், அவருக்கு தமிழ் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் என்னவென்று சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும், அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “பத்மஸ்ரீ விவேக் சார், நான் உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன். என்னுடைய முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற சாதனையாளருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. உங்கள் இறப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. நீங்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். விவேக் சார் குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நினைவுகள் உங்களுடன், அனைத்திற்கும் நன்றி சார்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.(15)