செய்திகள்

கட்சியைவிட நாடே முக்கியம் மஹிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படாது : ராஜித சேனாரட்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாது எனவும் இது தொடர்பாக ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டியேயே இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
“மஹிந்த முதலில் பிரதமர் பதவி கேட்டார்  அது கொடுக்கவில்லை அடுத்து தேசிய பட்டியலில் இடம் கேட்டார் அதுவும் கொடுக்கவில்லை இப்போ வேட்பாளர் பட்டியலில் இடம் கேட்கின்றார் அதுவும் கிடைக்காது. தோற்றவருக்கு இனி எதற்கு பதவி. எமக்கு கட்சியை விட நாடே முக்கியம் நாடு பாதுகாப்பாக இருந்தால் கட்சி பாதுகாப்பாக இருக்கும்.
நாம் நெல்சன் மண்டேலா பாதையிலேயே பயணிக்க விரும்புகின்றோம். முகாபேயின் பாதையில் அல்ல இதன்படி ஒருபோதும் மஹிந்தவுக்கு போட்டியிட இடம் கிடைக்காது. இது தொடர்பாக ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார்” என ராஜித தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.