செய்திகள்

கட்டிய வைத்தியசாலை கட்டடத்தை திறக்கக் கோரி டிக்கோயாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வைத்தியசாலை கட்டடத்தை திறக்கக்கோரி இன்று சர்வமத தலைவர்களும் பொது மக்களும் வைத்தியசாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கட்டடம் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதாகவும் நிர்மாணப்பணிகள் முழமையடைந்துள்ள நிலையிலும் கட்டடம் இதுவரை திறக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தற்போது இயங்கி வரும் வைத்தியசாலையில் இடப்பற்றாகுறை காணப்படுவதால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இப்புதிய கட்டடத்தை பொது மக்களின் நலன்கருதிஇ உடனடியாக திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மலையகத்தில் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த பொதுமக்களும் மற்றும் அட்டன் பகுதியை சேர்ந்த சர்வமத தலைவர்களும் கலந்துகெண்டனர்.

இவ் ஆர்ப்பாட்ட பேரணி டிக்கோயா கிளங்கன் பழைய வைத்தியசாலை கட்டிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினூடாக புதிய வைத்தியசாலை கட்டிடத்திற்கு வந்து அதன் முன்பு அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ‘நோயாளர்களை அலைய விடாதேஇ கிளங்கன் அரச வைத்தியசாலையை உடன் திறக்க அரசே உடன் நடவடிக்கை எடு’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. அதன்பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

இவ்விடயம் தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானியிடம் தொடர்பு கொண்டு வினாவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது புதிய கட்டிடத்தில் சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலைக்கு புதிய இயந்திரங்கள்இ உபகரணங்கள் இன்னும் சில கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகமான வசதிகள் செய்து நிறைவு பெற்றுயிருக்கின்ற இவ்வேலையில் இன்னும் சில தேவையான வசதிகள் பூரத்தியடைந்தபின் மேற்படி வைத்தியசாலை எதிர்வரும் காலங்களில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

DSC00356 DSC00360 DSC00362 DSC00363 DSC00365 DSC00376 DSC00377 DSC00388