செய்திகள்

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் அனைத்து ஊழியர்களும், தமது தொழிற்சாலை போக்குவரத்து சேவையின் ஊடாக மாத்திரம் தொழிற்சாலைக்கு வந்து செல்ல வேண்டும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.அதற்கமைய ஊழியர்கள், தமது தனிப்பட்ட வாகனங்கள் ஊடாக தொழிற்சாலைக்கு வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.அனைத்து ஊழியர்களுக்கும் இதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கமைய, சுதந்திர வர்ததக வலயத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 268ஆக அதிகரித்துள்ளது.(15)