செய்திகள்

கத்ரினா கைப் ஐ அடுத்த ஆண்டு திருமணம் செய்கிறேன்! ரன்பீர் கபூர்

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், நடிகை கத்ரினா கயிஃப்பை அடுத்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் ரன்பீர் கபூர் கூறியதாவது:

‘இந்த வருடம் இருவரும் பிஸியாக இருக்கிறோம். திருமணம் செய்துகொள்ள நேரம் இருக்காது.

அதனால் அடுத்த வருடம் இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இருவர் சம்மதத்துடன் எடுத்த முடிவு இது.

எங்கள் உறவு பற்றி இருவரும் உறுதியாக இருக்கிறோம். இப்போது அதைப் பற்றி சொல்லாவிட்டால் பிறகு எங்கள் உறவை மதிப்பதாக இருக்காது.

எனக்கு இப்போது 33 வயது. குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சரியான நேரம் இதுதான். கத்ரினாவும் இதையே விரும்புகிறார்’ என்றார்.