செய்திகள்

கந்தபுராணத்தில் காட்சி அளவையியல் பாங்கில் சைவசித்தாந்தம்

மருத்துவர் : சி. யமுனாநந்தா

தமிழைத் தெய்வத்தமிழ் என்பதற்கு சைவசித்தாந்த இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. அந்தவகையில் கந்தபுராணம் தமிழுக்கு கிடைத்த பெருநூலாகும். பிரம்மஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் தெய்வத்தமிழைத் திருத்தமிழ் என்று விபரிக்கிறார்.

கந்தபுராணம் சாமானிய மக்களும் சைவசித்தாந்தத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் காட்சியளவையியலைக் கைக்கொண்டு அருளப்பட்டு உள்ளது. கந்தபுராணக் காட்சிகளின் இயற்பியல் வெளியானது இற்றைப் பௌதீக அறிவுக்கும் அப்பாற்பட்டது. அவற்றிற் சில காட்சிகளை நாம் மேற்கோள் காட்டுவதனால் எமது எதிர்காலச் சந்ததியினர் கந்தபுராணத்தைப் புனிதத்துடன் பேணுவர் என்பது திண்ணம்.

கந்தபுராணத்தில் யுத்தகாண்டத்தில் காலம், வெளி, அண்டம் தொடர்பான விளக்கங்கள் உள்ளன. மேலும் ஓர் உயிரானது எவ்வாறு வெவ்வேறு சடத்துவத்துடன் ஒருங்கும் என்பது பற்றிய காட்சிகளும் உள்ளன. பிரபஞ்சத்தின் கட்டமைப்புப்பற்றிய காட்சியளவை விபரிக்கப்பட்டுள்ளது.

படத்தினுலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப்பாங்க
ஒருத்திரு புயங்கமுற்று மலமர லவளிகேனிவ
னிடத்தமர் கின்றபாம்பு கேங்குற விசும்பிற் செல்லு
முடற்குறையரவு முட்க வுலாயது கலாபமஞ்ஞை.

இங்கு ஆதிசேடன் பூலோகத்தைத் தாங்குதல் எனக் குறிப்பிடல் பிரபஞ்சத்தின் காட்சியளவையாகும். இதனை இன்றைய இயற்பியல் ஞரயவெரஅ வுழிழடழபல எனும் ஆய்வுகள் மூலம் காட்சிப்படுத்துகின்றது. ஊனக்கண், ஞானக்கண், கணணிக்கண் என மூன்றும் பிரபஞ்சத்தின் காட்சியை அவ் அவற்றின் வழியே காண்கின்றன.

அண்டத்தின் வடிவினைக் கந்தபுராணக் காட்சியில் தேரின் வடிவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
ஏழு நேழியுமிடைப் படுதீபமும் யாவுஞ்
சூழுகின்ற பேரடுக்கலு மொன்றிய தொடர்பிற்
கேழில் பன்மணி யோவியப் பத்திகள்கெழவு
மாழி தாங்கிய வண்ட மொத்திலங்கிய தன்றேர்
பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களின் எண்ணிக்கை ஆயிரம் கோடிகளுக்கு மேல் எனக் கூறப்பட்டுள்ளது.

“ஆயிரகோடி யண்டம் போனதோர் புகழும்” எனவும்
“ஐய மெய்தலி ராயிர கோடி அண்டத்தும்” எனவும் ஆயிரம் கோடி அண்டங்கள் உள்ளதை காட்சியளவையில் கச்சியப்பர் குறிப்பிடுகின்றார். இதனை இன்றைய விஞ்ஞானம் பல்அகிலம் என (ஆரடவiஎநசளந) கருதுகோளாக விளக்குகின்றது. இது வெளி தொடர்பான விளக்கமாக அமைகின்றது.

அண்டத்தின் இருப்பை,
“அருப்பு அயில் ரோமத்தில் அண்டம் மேவ”
எனக் காட்சிப்படுத்துகிறார். அதாவது இறைவனது உடலின் உரோமத்தின் உச்சியில் அண்டங்கள் அமைகின்றன எனக் காட்சியளவையியல் பிரபஞ்சத்தை விபரிக்கின்றார்.

அடுத்து காலம் தொடர்பான இயற்பியல் அளவில் யுகங்களிற்கு அப்பால் கற்பங்கள் பல உண்டு என்பதனை,

“கண்டிட வநந்த கோடி கற்பமுங் கடக்குமன்றே”
என அநந்தகோடி கற்பங்கள் உள்ள தன்மையை கச்சியப்பர் குறிப்பிடுகின்றார். காலத்தை நாம் விநாடி, நிமிடம், மணித்தியாலம், பகல், இரவு, நாள், கிழமை, மாதம், வருடம் எனக் கணக்கிடுதல் போல் ஆயிரம் வருடங்கள் சேர்ந்ததை யுகம் எனவும், பல யுகங்கள் சேர்ந்ததைக் கற்பம் எனவும் தொன்றுதொட்டு தமிழர் கணித்துள்ளனர். இங்கு அநந்தகோடி கற்பங்கள் என்பது காலவெளியின் முடிவிலித்தன்மையைக் காட்சிப்படுத்துகின்றது. உயிரானது வெவ்வேறு வடிவங்களில் உடலமைப்பைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை,

“புள்ளுக் கொண்ட மெய்யோன்”
சக்கரவாகப் பட்சி, மயில், சேவல் என வெவ்வேறு பறவைகளாக மாறும் காட்சிகள் வர்ணிக்கப்பட்டுள்ளன.

அண்டம் முழுவதும் உயிர் வியாபிக்கும் தன்மையை,
“கனல் மேனி கொண்டான் அண்டம்
காறும் நிமிர்ந்து ஏகுலவுற்றான்”
என சூரபத்மன் தேயுவடிவத்தைக் கொண்டு அண்ட முகட்டளவில் உயர்ந்து தோன்றினான். இது இயற்பியலில் ஞரயவெரஅ நுவெயபெடநஅநவெ போன்றது.

நீடு ஊழிசுலவும் சண்டச் சூறையினல்
ஏகி சூர் மாயம் பலவும் செற்று
ஏவம் மென உய்த்தாமை.

பிரசண்டச்சூழல் காற்றை நிகர்க்க வாயு வடிவத்தைக் கொண்டு சென்று சூரபன்மன் அக்கினிமயமாகிய மாயா வடிவம் எடுத்தான்.

இன்ன தன்மையிலீரிரு நாள் வரைத்
துன்னலன் றெலை யாத மராற்றியே
பின்னு மாயையின் பெற்றியைப் புந்தியு
ளுன்னியே பல்லுருக் கொடு தோற்றினான்

உயிரானது பல்லுருக்கொள்ளல் இங்கு விபரிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் ஞரயவெரஅ வசயளெகழசஅயவழைn சாத்தியமானது.

அகிலத்தில் ஒளியை எவ்வாறு இல்லாது செய்வது பற்றி பானுகோபன் வதைப்படலத்தில் 110வது பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

ஏற்றிகல் புரியும் வீரரெதிரெதித் துரக்கும் வாளி
நாற்றிசை கொண்ட வண்டப்பித்திகை காறுநண்ணி
மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவுதன்னை
மாற்றி யெவ்வுலகு ளோர்க்கு மலிதுயர் விளைந்தவன்றே.

என்று நாற்றிசை கொண்ட அண்டப்பித்திகை வரை அம்புகள் சென்று அதாவது அண்டத்தின் சுவர்வரை சென்று சூரிய ஒளியை அகற்றின. இதனை இன்றைய விஞ்ஞானம் இன்னமும் அடையவில்லை. அதாவது அண்டத்தின் எல்லையை அடைவதற்கு ஒளியைவிட வேகமான முதல் அவசியம். இதன்மூலம் அண்டத்தை இருளடையச் செய்முடியும். எனவே கந்துபுராணக் காட்சிகள் இற்றை, இயற்பியல் கருத்துகளுக்கு எழுச்சியினை ஊட்டுகின்றன.

சைவசித்தாந்தக் கருத்துக்களை மெய்யுணர்பவர்கள் உலக பந்தங்களில் இருந்து விலகி அமைதியாகிவிடுவர். உண்மையான ஆன்மீகவாதி ஓங்காரம்மேல் நின்று அசபை நாடியாக அமைவர். அதனை ஈண்டு நாம் நினைவிற் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும். நாம் மதத்தின் பெயரால் மதம் கொள்ளல் ஆகாது. சகல ஆத்மாக்களும் ஒருங்கே ஒடுங்குவதனையும், சகல காலங்களும் ஒருங்கே அடங்குவதனையும் கந்தபுராணக் காட்சியளவையில் சூரபத்மனின் 108 யுக காலமும், 1008 அண்டங்களில் ஆட்சியிலும் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. அவை எவ்வாறு ஒடுங்கியதோ அவ்வாறே நாம் இப்போது இக்கணத்தில் இதனைக் கடக்க பல யுகங்கள், பல கற்பங்கள் செல்லலாம்.