செய்திகள்

கந்தபுராண மகிமையும் தமிழர் வாழ்வியலும்

மருத்துவர் சி. யமுனாநந்தா

யாழ்ப்பாணக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம் என்பது பொது வழமை. கச்சியப்பசிவாச்சாரியாரால் கந்தபுராணம் தமிழகத்தில் அரங்கேற்றப்பட்ட பின் யாழ்ப்பாணத்தில் அரியாலை சித்திவிநாயகர் கோயிலில் கந்தபுராணம் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து கந்தபுராண படனம் யாழ்ப்பாண ஆலயங்களில் மரபாக வழங்கி வந்தது. கந்தனை வழிபடும் கந்தச~;டி தினங்களில் எமது இல்லங்களில் கந்தபுராண நூல்களை வைத்துப் படித்தல் நல்லது. கந்தபுராணத்திற்குப் உரையினை யாழ்ப்பாணத்தில் பலர் எழுதியுள்ளனர்.

வள்ளியம்மை திருமணப்படலத்திற்கும், தெய்வயானையம்மை திருமணப் படலத்திற்கும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இயற்றமிழ் போதகாசிரியர் ச. வயித்திலிங்கம்பிள்ளை (1890) அவர்கள் உரை எழுதினார். மகேந்திர காண்டத்திற்கு உரையினைப் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ. ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1929இல் எழுதியுள்ளார்.

சூரபன்மன் வதைப்படலத்திற்கு உரை எழுதிய மேலைப்புலோலி ஸ்ரீமத். வே. சிதம்பரப்பிள்ளை அவர்கள் கந்தபுராண வாச்சியார்த்த ஆராய்சி என்ற ஆய்வுக்கருத்தை 1938ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இவற்றினை நாம் இன்று மீளவும் ஒப்புவித்தல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

கந்தபுராணத்தின் சாரமாக சூரபன்மன் இரு தம்பியருடன் பிறந்து தேவராதியரை வருத்தி முருகப்பெருமானால் அழிவுற்றான் என்பது, இது வெறும் கதையல்ல முப்பொருள் தத்துவத்தைக் கூறும் உருவகம். இதன் கால அளவு 108 யுகங்கள், நிகழ்ந்தவிடம் 1008 அண்டங்கள். சைவசமயக் கிரியைகளில் 108 வலம்புரிச் சங்குகளையும், 1008 வலம்புரிச் சங்குகளையும் அமைத்து ஆகுதி வளர்த்து சிவலிங்கத்திற்கு அபிN~கம் செய்யப்படும் முறையானது 108 யுகங்களான காலமும், 1008 அண்டங்களாலான வெளியும் ஒளிச்சுடரான சிவனில் ஒடுங்கும் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதனையே இன்றைய அறிவியல் ஆராய்ச்சி எடுத்தியம்ப முயல்கின்றது.

அண்டபகிரண்டமளவாய் விரிவடைந்த இந்த மகா பிரபஞ்சத்தின் இயல்புகளையும், அதன்கண் ஐம்பெரும் பூதங்களின் இயக்கம், பரிணாமங்களையும், கல்ப்பங்கள் யுகங்களோடு சிரு~;டிகளின் வடிவு மாறுபடல். அதாவது பிரளயம் 108 யுகங்கள் முடிய அழிவுறும் கல்ப்பங்களாக மாறி மாறி ஏற்பட வெவ்வேறு கல்ப்பங்களில் நிகழ்ந்த சம்பவங்களே கந்தபுராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கற்பனைக் கதையாகக் கருதமுடியாது என விளக்குகின்றார். ஸ்ரீமத் வே. சிதம்பரப்பிள்ளை உவாத்தியார் அவர்கள். மேலும் சைவசமயத்தில் சொரூபலக்கணம், தடத்தலக்கணங்களை அறிந்தவர்களே கந்தபுராணத்தின் ஆலயங்களில் பாராயணஞ் செய்தல் அவசியம் என்பதை முற்றிலும் உணர்வர்.

பல கல்ப்பங்கள் கடந்தாலும் ஆன்மஞானிகளின் மெய் உணர்வால் அருளப்பெற்றதே சைவசித்தாந்தம். அதில் ஒரு பெரும் காப்பியமே கந்தபுராணம் ஆகும். விஞ்ஞானத்தைவிட மெய்ஞானமே மீவுயர்வுமிக்கது என்பது சித்தத்தெளிவு.

சமயப் பிரமாண சுருதிகளாகிய வேதாந்த சித்தாந்தமாகிய நூல்கள் பரவித்தைகளெனப்படும். அவை பிரபஞ்சம் அனைத்தையும், அதன்கண் அமைந்த தத்துவங்களையும் தர்க்கநூலின் பலவகையுறுப்புக்கள் கொண்டு ஆயுந்திறத்தில் ஆய்ந்து வஸ்துக்களை நிரூபணஞ் செய்யுந்திறத்தில் நிருபணஞ்செய்து இந்நெறியே ஆன்மாவும், அதனைப் பந்தித்திருக்கும் பாசமும் சர்வப் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாய், அகண்ட சச்சிதானந்த சொரூபமாய் விளங்கும் பரம்பொருளுமாகிய முப்பொருள்-களுமே மெய்ப்பொருள்கள் என்பதனைக் கந்தபுராணம் கூறுகின்றது.

புராணங்கள் உலகபோகத்தை மெய்யென்றழுந்தி நுகர்ந்துநிற்கும் மந்ததரமந்த மதியினைரையும் உய்விக்க வேண்டி அமைந்தவை. புத்தி பெரிதும் விருத்தியுற்ற இக்காலத்தில் புராண பாராயணம் வேண்டாமேயெனின் அற்றன்று என 1935ம் ஆண்டிலேயே சிதம்பரப்பிள்ளை உவாத்தியார் எடுத்துரைத்துள்ளார். இக்காலத்தில் புத்தி விஞ்ஞானத்தில் விரிவடைந்ததே அன்றி ஆன்மீகத்தில் அல்ல. ஆதலின் புராணபடனம் எமக்கு இன்றியமையாதது ஆகின்றது. நவீன தகவல் தொழில்நுட்பங்களைக் கருவியாக்கி கந்தபுராணத்தை எமது சந்ததிக்கு தேன்போல இனிப்புறச் சுவைக்கச் செய்யலாம்.

முன்னர்ப் பாராயணம் செய்து உய்ந்தோரும், அறிஞர் தத்துவப்பொருள் உணர்ந்தும் மற்றையோர், சமயாசாரமாதியவுணர்த்தும் உய்தற் பொருட்டும், நற்பொழுது போக்குதற் பொருட்டும் ஆலயங்களில் நிரந்தரம் நிகழவேண்டியதாக இருக்கின்றது கந்தபுராணபடலம்.

கந்தபுராணத்தில் யுத்தகாண்டத்தில் உள்ள காட்சிகள் சிலவற்றைக் கூறுவதனால் இக்கால நவீன பௌதீக வேதியல் அறிவுக்கு அப்பால் எமது மெய்யறிவு திகழுகிறது என்ற உண்மையை உணரலாம். அடுத்து தெய்வபாசையாகக் கருதப்படும் தமிழும் சமஸ்கிருதமும் யுகம் யுகங்களுக்கு அப்பால் பல காலங்களுக்கு மொழியாக அமைந்ததையும் மெய்யுணர்வால் உணரத் தோற்றும்.

சிவசக்தியின் உருவகமாகவே வேல் அமைந்து உள்ளமையை பானுகோபன் யுத்தபடலத்தின் 211ம் பாடலில் காணலாம்.

அந்தமிலொளியின் சீராலறுமுகம் படைத்த பண்பா
லெந்தைக ணின்றும் வந்த வியற்கையாற் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் பெற்றதன் மையாற் றனிவேற்பெம்மான்
கந்தனே யென்ன நின்னைக் கண்டுள கவலை நீத்தேம்.

அந்தமில் ஒளி – இன்றைய குவாண்டம், பௌதீகத்திலும் காலவெளிப் பிரபஞ்சத்தில் ஒளியின் அந்தமில்லாத தன்மையை அறியலாம். அவ்வாறே பிரபஞ்சத்தின் அனைத்துப் பௌதீகங்களும் ஒளி அலைவடிவிலேயே பல்வேறு பரிணாமங்களில் அமைந்து உள்ளமையைக் குவாண்டம் உயிரியலில் ஆராய்ந்;து உள்ளனர். அந்;தமில் ஒளியை அடியார்க்கு தரும் வேற்கடவுள் ஞானஒளியைத் அருளுகின்றார். வேற்கடவுளின் அந்தமில் ஒளியே பிரபாகரம் ஆகும்.

முருகப்பெருமானுக்கு உரிய ஆறுமுகங்கள் சிவனுக்குள்ள ஆறுமுகங்களே. அவையே வேல் கடவுளாக அமைந்துள்ளது.

சிவனின் ஆறுமுகங்கள் ஆவண அதோமுகம் கீழ்நோக்கிய மகா சாதாக்கியம் பொருந்திய பிரணவமுகம். சிவசாதாக்கியம் செறிந்த மேல்நோக்கிய ஈசான முகம்,
அமூர்த்தி சாதாக்கியம் செறிந்த மேற்கு நோக்கிய சத்தியோசாதமுகம், மூர்த்தி சதாக்கியம் செறிந்த வடக்கு நோக்கிய வாமதேவ முகம், கர்த்திருசாதாக்கியம் செறிந்த கிழக்கு நோக்கிய தற்புருட முகம் மற்றும் தெற்கு நோக்கிய தட்சணா முகம் என்பவையே சிவனின் ஆறு முகங்கள்.

வேற்படைக்கு ஆறுமுகங்கள் உள்ளன என்பதனைக் கந்தபுராணத்திற்கு உரை எழுதிய ஆசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் விளக்குகிறார். வேற்படை சக்திகளின் கூட்டமாகும். மூன்று சதுரங்கள் ஒவ்வொன்றும் மேல்முக்கோணம், கீழ் முக்கோணம் என நடுவில் பிரியும். மேலே உள்ள முதலாவது சதுரத்தின் மேற்புற முக்கோணம் இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்தி என்பவற்றின் கூட்டமாகும். இவ்வாறு அமைந்த மேல் முக்கோணம் பரசொரூபமாகும். இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்திகளின் அபரசொரூபம் கீழ்முக்கோணமாகும். இது அதோ முகமாகும். கீழ் முக்கோணத்தின் நுனியில் மீளவும் சக்திகள் தம்முள் மாறிமாறி இச்சையிற் கிரியை, கிரியையில் ஞானம், ஞானத்தில் இச்சை எனத் திரிகோணமாகும்.

நடுவுள் உள்ளது நாற்கோணமாகும். அது சது~;கோணம் எனப்படும். அக்கோணத்தின் அதோமுகத்தில் இருந்து மீளவும் அந்தச் சக்திகள் தம்முள் மாறிக் கூடி முக்கோணமாகும். அதன் பாதத்தில் இருந்து பின்பும் முக்கோணம் தோன்றி மேலுள்ள முக்கோணத்துடன் கூடி நாற்கோணமாகும். இவ்வாறு மூன்று நாற்புயங்கள் கூடிய வடிவமே வேற்படை ஆகும்.

இதில் முதலாவது சது~;கோணத்தில் இச்சாசக்தியும், மத்திய சது~; கோணத்தில் ஞானாசக்தியும், பாத சது~;கோணத்தில் கிரியாசக்தியும் அதிகரிக்கும். இச்சக்திகள் எல்லாவற்றையும் ஆயுதமாகக் கொண்ட கடவுளே வேலாயுதன். சிவனின் வடிவமே ஆறுமுகக்கடவுளாகவும் வேலாயுதனாகவும் விளங்குவது சிறப்பு.

வேலின் சக்தியினை கந்தபுராணப் பாடல்களில் நாம் காணலாம். இவை இற்றை உலகின் வாழ்வில் கற்பனைக்கப்பாலானதாக சிலருக்குத் தெரியலாம். ஆனால் இவை யுகங்கள் பல முற்பட்டவை கல்பங்கள் பல முற்பட்டவை பிரபஞ்ச வாழ்வியல் சம்பவங்கள் ஆகும்.

இன்று விஞ்ஞானிகள் முனையும் நட்சத்திரப் போர்முனைகளும் மீயொலி விமானக்குண்டு வீச்சுக்களும் கந்தபுராணக் காட்சிகளைப் பொது வாழ்வியலிற்கு இட்டுக்காட்டுகின்றன. அதாவது இச்சைகளை எடுத்துக் காட்டுகின்றன.

வேற்படை வலிமை கந்தபுராணக் காட்சிகள்
1. கற்பொழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன கணக்கில்
செற்பொழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகிரி
யெற்பொழிந்தன சூலம் வேல் பொழிந்தன வீண்டும்
விற்பொழிந்தன சரமழை பொழிந்தன விரைவில்.
(மூன்றாம் நாள் பானுகோபன் யுத்தப்படலம் – 122)
இவை இன்றைய யுத்தமுனைக்காட்சிகளுக்கு ஒப்பானவை.
2. உலவை மாப்படை யுண்டி மங்கியை யொருங்கே
வலவை நீர் மையாற்றம் முழை வரும்படிவாங்கி
யலகில் வெம்பணி விடுத்தென வன்னவை யுமிழ்தீக்
குலவுகின்றன புகையெனக் கொடு விடங்குழும.
(பானுகோபன் யத்தப்படலம் – 95)

வாயுப்படைக் கலத்தால் அக்கினிப் படைக்கலத்தை அழித்தல் இதனை இன்றைய வல்லரசுகள் காற்றை வெறுமையாக்கும் அணு ஆயுதங்கள் மூலம் செய்கின்றன.

3. புகையெழுந்தன வெம்மையு மெழுந்தன புலிங்கத்
தொகை யெழுந்தன ஞெகிழிகளெ ழுந்தன சுடரின்
வகை யெழுந்தன பேரொலி யெழந்தன வன்னிச்
சிகை யெழுந்தன செறிந்தன வுhனமுத்திசையும் .
(பானுகோபன் வதைப்படலம் – 88)

புகைபரவல், தீப்பொறி பரவல், பெருஞ்சத்தம் கேட்டல் என்பன இன்றைய காலத்தில் நாம் காணலுற்றோம். அஃதே கந்தபுராணத்திலும் காட்சியாக இயற்பியல் வெளிகளும் நட்சத்திரப்போர் முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை யுருவ நல்கி யெம்பிரான் பiடையிரண்டு
மைம்மலி கடலும் வானுமாதிர வரைப்பும் பாருங்
கொம்மென விழுங்கியண்ட கோளகை பிளந்து மேல்போய்த்
தம்மின் மாறாகி நின்று சமர்த்தொழில் புரிந்தவன்றே.
(பானுகோபன் வதைப்படலம் – 123)

இங்கு அண்டகோளாகப் பிளந்து சமர்த்தொழில் புரிதல் என்பது கருந்துளைகளை (டீடயஉம hழடநள) உடைத்து யுத்தம் புரியும் நட்சத்திர யுத்தத்தினை (ளுவயச றயச) எடுத்துக் காட்டுகின்றது. கருந்துளைகள் அழிக்கப்படும்போது அதன் கண் உள்ள அண்டமும் அழியும் என்பது இன்றைய பௌதீக உண்மையாகும்.

எதிர்த்தனர் பூதர் தாமு மவுணரு மிழப்பிற்பேரி
யுதிர்ந்தன துடியுஞ் சங்குமார்தன வண்ட மீன்க
ளுதிர்ந்தன வனையர் கூடியுடன்று போர்புரியவையம்
பிதிர்ந்தன பொதிந்த வண்டப்பிந்திகை பிளந்த தன்றே.
(அக்கினி முகாசுரன் வதைப்படலம் – 33)

இங்கு அண்டத்தின் சுவரினைப் பிளந்து யுத்தம் நிகழ்ந்தமையை அண்டப் பித்திகை பிளந்து என்கின்றார். கச்சியப்ப சிவாச்சாரியார். இவ்வாறே கந்தபுராணக் காட்சிகள் இற்றை விஞ்ஞானக் கண்ணுக்கும், மெய்ஞ்ஞானக் கண்ணுக்கும் தெய்வத் தமிழால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.