செய்திகள்

கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பில் சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஆர். சாணக்கியன் ஆகியோருக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனடா சென்றுள்ள இவர்கள் இருவரும் அங்கு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மண்டபமொன்றில் நடைபெற்ற கூட்டமொன்றில், அதில் கலந்துகொண்டுள்ளவர்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்கள் சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
இவ்வேளையில் அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலைமையில் சுமந்திரனும், சாணக்கியனும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)