செய்திகள்

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி வருத்தம்

மேற்கு வங்காளத்தில் 72 வயதுடைய  கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்  மற்றும் அரியானாவில் தேவாலயம் தகர்க்கப்பட்டமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நாடியா மாவட்டத்தில் கங்ணாபூர் பகுதியில் கொள்ளைக்காரர்கள் சிலர் 72 வயது கன்னியாஸ்திரியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அந்த மடத்தில் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள்..  இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதுடன் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மற்றொரு சம்பவத்தில், அரியானாவின் ஹிசார் அருகே, கைம்ரி கிராமத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த தேவாலயம் ஒன்று இடித்து தள்ளப்பட்டுள்ளது..  அங்கு இருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலை வைக்கப்பட்டதால் அரியானாவில் குறிப்பிட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மத எதிர்ப்பு தொடர்பாக கட்டவிழ்து விடப்பட்ட இந்த சம்பவங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை பிரதமர் தெரிவித்துள்ளார்.

nun 2

nun 1