செய்திகள்

கமல் வேடத்தில் திரிஷா

கமல் நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ‘கல்யாணராமன்’.

இதில் அண்ணன், தம்பி என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார் கமல். நாயகியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். முன்பற்கள் தெறிக்க, ‘காதல் வந்துருச்சி.. ஆசையில் ஓடிவந்தேன்..’ என ஸ்ரீதேவி பின்னால் கமல் ஆடிப்பாடும் பாடல் சூப்பர் ஹிட். ஜி.என்.

ரங்கராஜன் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில், இப்படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் கமல் நடித்த வேடத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் திரைகதையை அப்படியே நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றப் போகிறார்களாம்.

அந்தவகையில் அக்கா, தங்கையாக டபுள் ஆக்ஷனில் திரிஷா நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை தயாரிக்கப்போவது திரிஷாவின் மேனேஜர் கிரிதரன். எல்லாம் சரி, இதற்கு கமலிடமும் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடமும் அவர்கள் ஒப்புதல் வாங்கிவிட்டார்களா என சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர்.