செய்திகள்

கல்கிசை கடலில் ‘ஜெலி மீன்’ தாக்குதலுக்கு இலக்கான 50 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு கல்கிசை கடலில் குளித்துக்கொண்டிருந்த 50ற்கும் மேற்பட்டோர் ஜெலி மீன் (ஜெலிபிஸ்’)எனப்படும் ஒருவகை விச மீன்களின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று மாலை குறித்த கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது இவர்களின் உடல் மீது  அந்த மீன்கள் பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து உடல் அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு இலக்காகியுள்ள இவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Jelly Fish