செய்திகள்

களுவண்கேணியில் ரயிலில் மோதுண்டு யுவதி உயிரிழப்பு மேலும் ஒரு யுவதி படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

இன்று பிற்பகல் 4.30மணியளவில் களுவன்கேணியில் ரயில் கடவையினை முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் தனியார் தாதிய பயிற்சி கல்லூரியில் பயின்றுவருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.