செய்திகள்

கவுணாவத்தையில் நாளை வருடாந்த மிருகபலி: சட்டம் ஒழுங்கு பின்பற்ற வலியுறுத்தல்

கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை வருடாந்தம் இடம்பெறும் மிருகபலியிடல் இடம்பெறவுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சட்டம்,ஒழுங்கு என்பவற்றைப் பின்பற்றுமாறும் ஆலய தர்மகர்த்தா சபையினரிடம் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கு வெட்டப்படும் ஆடுகள் மிருக வைத்திய அதிகாரியின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஆட்டின் உரிமையாளர் தனது ஆடு என்பதைக் கிராம சேவையாளர் மூலம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.வெட்டப்படும் ஆடுகள் தொடர்பில் முழுமயான வியாபார நடைமுறை பின்பற்றப்படும் என்றும் ஆலயச் சுற்றாடலில் வைத்து ஆடுகளை விற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் ஆடுகளை வெட்டுபவர் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.கொல்களத்திற்கு அண்மையில் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மாத்திரமே மிருகபலியிடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேள்வியில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் நான்கு சுகாதாரப் பரிசோதகர்கள் ஆடுகளைப் பரிசோதிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.அத்துடன் இளவாலைப் பொலிஸாரும் கண்காணிப்புப் பணிpயில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் நிருபர்-