செய்திகள்

கஹவத்தை தாய் கொலையுடன் தொடர்புடைய மகன் 27 வரை விளக்க மறியலில்

கஹவத்தை கொட்டகேதென்ன பகுதியில் 39 வயது பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்;பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான அந்த பெண்ணின் மகன் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்ற விசாரனை பிரிவினரால் இன்றைய தினம் சந்தேக நபர் பெல்மடுலை பதில் நீதவான் சமத் சரவீர முன்னிலையில் ஆஜர்படுத்திய போது  அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி இரவு வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த குறித்த பெண் 7ம் திகதி அவரின் வீட்டுக்கு அருகிலிருந்த ஓடையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பாக அந்த பெண்ணின் 18 வயது மகன் சந்தேகதில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த கொலையை நானே செய்தேன் என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.