செய்திகள்

கஹவத்தை பெண்ணின் கொலை: அவரின் மகன் கைது

கஹவத்தை கொட்டகேதென்ன பகுதியில்  பெண்னொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் 18 வயது மகன் பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விசாரனைக்காக கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரனைகளை நடத்தியதன் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இவரிடம் விசாரனைகளை நடத்தியதன் மேலும் பல தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.