செய்திகள்

காணாமல்போன முதியவா் 15 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்பு

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் ஒருவா் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த தொலவத்தகே தொண் உபசேன (வயது 82) என்ற முதியவா் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனா்.

இந்நிலையில், நேற்றைய தினம் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அவரது செருப்பு, குடை, சாரம் என்பன கினிகத்தேனை தியநில்ல பகுதியில் காணப்பட்டதையடுத்து இது தொடர்பாக மஸ்கெலியா அதிரடிப் படை உயா் அதிகாரி சி.ஐ.குலந்துங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அதிரடிபடையினருடன் சென்று தேடுதல் மேற்கொண்ட போது 15 அடி பள்ளத்தில் காட்டுப்பகுதியில் முதியவா் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Ginigathena Police (7)

Ginigathena Police (3)

Ginigathena Police (2)

Ginigathena Police (1)