செய்திகள்

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்போம் : ஜனாதிபதி

கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்னாள் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்ற போது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணை ஆவணங்களை மீண்டும் திறந்து விசாரணைகளை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். இதன்மூலம் மூடி மறைக்கப்பட்ட பல விடயங்கள் வெளியில் வரும். நியாயமான முறையில் விசாரணைகளை நடத்துவதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளார்.