செய்திகள்

காலி டெஸ்ட்: ஆசாத் ஷாபிக் சதத்தால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 417 ஓட்டங்கள்

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 300ஓட்டங்களை பெற்றது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆசாத் ஷாபிக் 14 சர்பிராஷ் அஹ்மத் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பிராஷ் மற்றும் ஆசாத் ஷாபிக் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பாகிஸ்தான் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய சர்பிராஷ் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆனால் மறுமுனையில் விளையாடி ஆசாத் ஷாபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 131ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 417 ஓட்டங்களை குவித்தது.

117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்ததுள்ளது. சங்ககரா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்