செய்திகள்

கால்வாயில் குதித்து சிறுமியொருவர் உயிரிழப்பு

 

உடபுசல்லாவை – கொல்எல்பிட்டிய பகுதியில் 02.04.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் கொல்எல்பிட்டிய ஆற்றில் குதித்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக உடபுசல்லாவை பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் வல்பொல தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

02.04.2015 அன்று பாடசாலை சென்று மீண்டும் இரு நண்பிகளுடன் வீடு திரும்பி வரும் போது குறித்த ஆற்றிற்கு அருகில் நின்று நண்பி இருவா்களையும் போகுமாறு கூறிய பின் இவ்வாறு ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அப்பகுதியில் சென்ற ஒருவா் மாணவியின் புத்தக பையை கண்டு அதை பற்றி குறித்த சிறுமியின் பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து பிரதேச வாசிகளும், பொலிஸாரும் இணைந்து 15 நிமிடங்களில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு சடலத்தை மீட்டுள்ளனா்.

சம்பவத்தில் கொல்எல்பிட்டிய பிரதேசத்தை சோ்ந்த சச்சனி விக்கிரமசிங்க என்ற 14 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலம் (03.04.2015) அன்று உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நீரில் மூழ்கி மூச்சு தினறியே சிறுமி உயிரிழந்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக உடபுசல்லாவை பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் வல்பொல மேலும் தெரிவித்தார்.

காதல் விவகாரத்தினால் இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.

உடபுசல்லாவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.