செய்திகள்

காவத்தையில் போராட்டங்களை நடத்துபவர்களும் புலிகளா? மஹிந்தவிடம் கேள்வியெழுப்பும் ரணில்

மாணவியின் கொலையையடுத்து யாழில் நடந்த போராட்டங்களுக்கு பின்னால் எல்.ரீ.ரீ.ஈயினரெ செயற்பட்டார்கள் என்றால் காவத்தையில் தற்போது போராட்டங்களின் பின்னால் செயற்படுபவர்களும் எல.ரீ.ரீ.ஈயா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
புங்குடுதீவில்  இடம்பெற்ற  மாணவியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது  அந்த போராட்டங்களின் பின்னணியில் எல்.ரீ.ரீ.ஈயினரே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்படியென்றால் காவத்தையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று   தெடர்பாக சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் வீதிக்கு இற்ஙகி போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு பின்னால் இருப்பவர்களும் எல்.ரீ.ரீ.ஈயினரா என  கேட்கின்றேன். அவருக்கு ஆதரவாக  பவித்திரா வன்னியாராட்சி போன்றோர் காவத்தைக்கு எல்.ரீ.ரீ.ஈயினரை கொண்டு சென்றார்களோ. என அவர் தெரிவித்துள்ளார்.