செய்திகள்

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை – தடுக்கக் கோரி தி.மு.க., – அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., – அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., – பா.ஜ., – காங்., – கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர். எலியும் பூனையுமாக இருக்கும் இக்கட்சிகள் அனைத்தும், இந்த விஷயத்தில், அ.தி.மு.க., அழைப்பை ஏற்று அணி சேர்ந்துள்ளது, அதிசய கூட்டணியாகவே கருதப்படுகிறது.

‘காவிரியில் புதிய அணை கட்ட, கர்நாடகத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்’ என, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை, டில்லியில், பிரதமர் மோடியிடம் அளிப்பதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த எல்லா கட்சிகளின், எம்.பி.,க்களும் வர வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில், முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.அதை, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளதுடன், தன் கட்சி சார்பில், டில்லி செல்லும் குழுவில், திருச்சி சிவா இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது.அதேபோல், பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் ஒரே எம்.பி.,யான அன்புமணியும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

லோக்சபாவில் இல்லாவிட்டாலும், ராஜ்யசபாவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அ.தி.மு.க., அரசின் அழைப்பை ஏற்க முன்வந்துள்ளன.

சட்டசபையில் நேற்று, தனி நபர் தீர்மானத்தை கொண்டு வந்து, முதல்வர் பேசியபோது, ”இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த, அனைத்து எம்.பி.,க்களும், பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும். தமிழகத்தின் கவலையையும், நிலைப்பாட்டையும், பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும்,” என, கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்  பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திட்டக் கமிஷனுக்கு பதிலாக, தற்போது, ‘நிடி ஆயோக்’ என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் நிர்வாக குழு கூட்டத்துக்கு பின், ‘திறன் மேம்பாடு, மத்திய அரசின் திட்டங்கள், தூய்மை இந்தியா’ ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக, மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.

ம.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளது; இதில், 11 முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து, வரைவு அறிக்கை தயார் செய்வதற்காக, ஒரு துணை குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

‘நிடி ஆயோக்’ அமைப்பின் தலைமை நிர்வாகி, சிந்துஸ்ரீ குல்லார் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவின் அறிக்கை, ஏப்., 27ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்து தீவிரமாக விவாதித்து, அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்